search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுச்சூழல் தினம்"

    • மரக்கன்றுகள் தேவைக்கு 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    • காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 4,50,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று (02-06-2024) தூத்துக்குடியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முதல் மரக்கன்றை விவசாயிக்கு வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.

    சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் மிகத் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் இவ்வியக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

    அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார். அவர் முதல் மரக்கன்றை கூட்டாம்புளி கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் வழங்கி இந்நிகழ்வை துவங்கி வைத்தார்.

    இவ்வியக்கம் மூலம் கடந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 4,17,000 மரங்களும், தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 10 லட்சம் மரங்களும் விவசாய நிலங்களில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்த வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.

    மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • சுற்றுச்சூழலை அழிப்பது யாருடைய உரிமையும் இல்லை.
    • சுற்றுப்புறம் ஆரோக்கியமாக இருந்தால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

    நம் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதன் முக்கியத்துவத்தை உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் குறிக்கிறது. நமது சுற்றுப்புறம் ஆரோக்கியமாக இருந்தால், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

    ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் செயல்பாடுகளால் அந்த பகுதியில் காற்றின் தரம், நீர் நிலைகளில் ஏற்படும் அசுத்தம், நிலத்தில் சேரும் கழிவுகள் போன்ற நிகழ்வுகளே சுற்றுச்சூழல் மாசடைதல் என்கிறோம்.

    இதுபோன்று சுற்றுசூழல் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தவே சுற்றுச்சூழல் சுகாதாரத்தின் சர்வதேச கூட்டமைப்பின் (IFEH) சார்பில் உறுப்பு நாடுகள் இணைந்து கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26-ந் தேதி (நாளை) உலக சுற்றுச்சூழல் சுகாதார தினமாக கொண்டாடி வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு தனித்துவமான கருப்பொருளை இந்த அமைப்பு உருவாக்கி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

    இந்தாண்டுக்கான கருப்பொருள் "உலகளாவிய சுற்றுச்சூழல் பொது சுகாதாரம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறது" என்பதாகும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக உலகத் தலைவர்கள் இந்த தினத்தை ஆதரித்து வருகின்றனர்.

    தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து புவி வெப்பமயமாதல், அமில மழை பொழிதல், பருவநிலை மாற்றமடைதல் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன. இந்த நிகழ்வுகளால் மனிதர்களும் பலவிதமான நோய்களுக்கு உட்பட்டு பாதிப்புகளை எதிர்கொள்ளுகின்றனர்.

    இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த நாம் அனைவரும் பொறுப்புகளை உணர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத செயல்களை செய்ய வேண்டும். இந்த நாளில் சுற்றுச்சூழல் சுகாதார தினத்தின் முக்கியத்துவம் பற்றி பேசுதல், பல்வேறு தரப்பு மக்களும் ஒன்று கூடி வெளிப்படையாக கருத்துகளை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாதுகாப்பிற்காக வாதிடுவது போன்ற நிகழ்வுகள் நடத்த வேண்டும்.

    மேலும் சுத்தமான காற்று, நிலையான காலநிலை, போதுமான நீர் , கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு, நல்ல விவசாய நடைமுறைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இயல்பினால் சுற்றுச்சூழல் மாசடைவதில் இருந்து பாதுகாக்கலாம்.

    "கடைசி மரத்தை வெட்டி, கடைசி மீனைக் கொன்று, கடைசி நதியில் விஷம் கலந்தால், பணத்தை சாப்பிட முடியாது என்பதை நீங்கள் காண்பீர்கள்" - என்றார் ஜான்மே. சுற்றுச்சூழலை அழிப்பது யாருடைய உரிமையும் இல்லை. அதனை பாதுகாப்பதே அனைவரின் கடமையாகும்.

    • சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடந்தது
    • பசுமையான கிராமமாக செயல்பட அனைத்து மக்களும் செயல்படுவோம் என உறுதிமொழி

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன் தலைமையில், தென்னை மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

    இதில் மகளிர் குழுவினர் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் தென்னை மரக்கன்றுகள் நட்டனர்.

    ஊராட்சிகளில் சுத்தமான மற்றும் பசுமையான கிராமமாக செயல்பட அனைத்து மக்களும் செயல்படுவோம் என சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்றனர்.

    • சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் மாரத்தான் நடத்தப்பட்டது.
    • சைக்கிள் மாரத்தான் முடிவில் அனைவருக்கும் பத க்கங்கள் வழங்கப்பட்டது.

    கடலூர்:

    என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுற்றுச்சூழல் துறை மற்றும் பீப்புள் சர்வீஸ் குரூப் தொண்டு மையம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துகூறும் வகையிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் விழிப்பு ணர்வு சைக்கிள் மாரத்தான் நடத்தப்பட்டது.

    இதனை என்.எல்.சி.இந்தியா நிறுவன செயல் இயக்குனர் கார்த்தி தொடங்கி வைத்தார். முதன்மை பொது மேலாளர் அன்பு செல்வன் பொது மேலாளர்கள் ராமலிங்கம் ,செந்தில்குமார் ,சுப்பி ரமணியம் மற்றும் துணை பொது மேலாளர் சீராள ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியை பீப்பிள் சர்வீஸ் குரூப் நிறுவனர் தாமரைச்செல்வன் ஏற்பாடு செய்திருந்தார். விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. சுமார் 8 கிலோமீட்டர் இந்த விழிப்புணர்வு சைக்கிள் மாரத்தான் நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் பத க்கங்கள் வழங்கப்பட்டது.

    • சர்வதேச உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • மரக்கன்று நடுதல் விழிப்புணர்வு பேரணி, சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்பு பொது இடங்களை தூய்மை பணி இணைந்து நடத்தப்பட்டது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம்,சித்தாமூர் ஒன்றியம், சோத்துப்பாக்கம் கிராமத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கல்பனா ஷங்கர் மற்றும் முதுநிலை துணைத் தலைவர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில்,முதுநிலை பொது மேலாளர் மோசஸ் சாமுவேல் வழிகாட்டுதலின்படி நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட சர்வதேச உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவானது ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் பகுதி அளவிலான இணையம் , பெல்ஸ்டார் நிதி நிறுவனம்

    ஆகியோர் உதவியோடு நடைபெற்றது .இதில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் மாவட்ட மேலாளர் இன்பநாதன் உலக சுற்றுச்சூழல் தினத்தை பற்றி சிறப்புரையாற்றினார், தங்கராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி, சுரேஷ் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வழி நடத்தினார்கள். முழு சுகாதார திட்டத்தை பற்றி சிறப்புரையாற்றினார்கள், ஊராட்சிமன்ற தலைவர். ஸ்ரீதர் விழாவுக்கு தலைமை தாங்கினார், அருணகிரி துணைத் தலைவர் , கிருஷ்ணமூர்த்தி ஊராட்சி மன்ற செயலர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஜெய் வசந்தி, செந்தமிழ்ச்செல்வி, செலின் ராணி, அன்னை இந்திரா அப்துல் கலாம் பகுதி அளவிலான இணையத்தின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்படும் தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் பணியாளர். ஜெயலட்சுமி விநாயகமூர்த்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில் மரக்கன்று நடுதல் விழிப்புணர்வு பேரணி, சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்பு பொது இடங்களை தூய்மை பணி இணைந்து நடத்தப்பட்டது.

    • சைக்கிள்களில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
    • சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து சமுதாயத்தை முன்னேற்ற பாடுபட வேண்டும் என சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பேசினார்.

    வீ. கே. புதூர்:

    மிதிவண்டி தினம் மற்றும் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தென்காசி அரசு ஐடிஐ மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    பேரணியை தென்காசி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜு முன்னிலை வகித்தார். பேரணி தென்காசி அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் இருந்து குத்துக்கல்வலசைவரை சென்று மீண்டும் அரசு தொழிற்பயிற்சி வளாகத்தை 8 கிலோமீட்டர் வரை சென்று வந்தடைந்தது.

    பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களின் சைக்கிள்களில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் மிதிவண்டி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

    மாணவர்களிடையே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன் பேசும்போது, மாணவர்கள் மிகச் சிறந்த கல்வி கற்று சமுதாயத்துக்கு பல்வேறு அரிய பணிகள் ஆற்றிட வேண்டும்.

    குறிப்பாக சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒற்றுமையாக கல்வி கற்று தங்கள் குடும்பத்தையும் சமுதாயத்தையும் முன்னேற்ற பாடுபட வேண்டும்.

    மேலும் சாதிய ரீதியிலான எவ்வித உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் செந்தில் ராஜு ,உதவி பயிற்சி அலுவலர் சேகர், இளநிலை பயிற்சி அலுவலர் கமல கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இயற்கையுடன் இணைந்து நிலையாக வாழ்தல் என்ற மையக்கருத்தில் மரக்கன்றை நட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன் வனசரகர் ரவீந்திரன், உள்பட வன ஊழியர்கள் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் தேசிய பசுமைப்படை கன்னியாகுமரி மாவட்டம் இணைந்து 'ஒரே ஒரு பூமி' என்ற சிந்தனையில் புலியூர்குறிச்சி உயிரின பன்மய பூங்காவில் வைத்து உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை தாங்கினார். தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோபிரகாஷ் வரவேற்றார்.

    சுற்றுச்சூழல் உறுதி மொழியை தக்கலை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சோபா வாசித்தார். துண்டு பிரசுரங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட அதை வன அலுவலர் பெற்றுக்கொண்டார்‌. தொடர்ந்து மஞ்சள் பைகளை அனைவருக்கும் வழங்கினார்.

    பின் இயற்கையுடன் இணைந்து நிலையாக வாழ்தல் என்ற மையக்கருத்தில் மரக்கன்றை நட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன் வனசரகர் ரவீந்திரன், உள்பட வன ஊழியர்கள் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எட்வின் கிளாட்சன் நன்றி கூறினார்.

    • உலக சுற்றுச்சூழல் தினம்
    • 500 வகையான மரக்கன்றுகள் நட்டனர்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், நாற்றம்பள்ளி ஒன்றியம் எக்லாஸ்புரம் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பலவகையான மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர். இ.எஸ்.பாரதிசேட்டு, துணைத்தலைவர், தினகரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    இதேபோல், அம்பலூர் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500 பல்வேறு வகையான பலன் தரும் மரக்கன்றுகள் நட்டனர்.

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 1330 அடி நீள சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியம் வரையும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு அமைச்சர் கந்தசாமி சான்றிதழ், பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் வனம் மற்றும் வனவிலங்கு துறையும், புதுவை சுற்றுச்சூழல் மற்றும் சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு அபிவிருத்தி சங்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தேங்காய்திட்டு அரசு கழிமுக மீன் பண்ணையில் 1330 அடி நீள சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியம் வரையும் போட்டி இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாரியப்பன், ஜி.ஆர். சண்முகம், டாக்டர் தமிழ்வாணன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். வினோத்குமார் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக புதுவை வனத்துறை தலைமை வன காப்பாளர் குமார், புதுவை அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மோகன்குமார், மீன்வளத்துறை துணை இயக்குனர் மீரா சாகிப் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஓவிய போட்டியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு அமைச்சர் கந்தசாமி சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    செம்படுகை நன்னீரகம் ராமமூர்த்தி, ஸ்ரீராம் ஐ.ஏ.எஸ். அகாடமி வெற்றிச்செல்வம், பூவுலகின் நண்பர்கள் சீனு.தமிழ்மணி, எம்.ஜி.ஆர். பொதுநல பேரவை சிவா, கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் ராஜா, தமிழ்கனல் ராமகிருஷ்ணன், தமிழ்பணி மன்றம் கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    ×